புதுவருடத்தில் போதை விருந்து! குஷ், கொக்ஹைன் போதைப் பொருட்களுடன் 4 பெண்கள் கைது! சொகுசு கார் பறிமுதல்.. |

புதுவருட கொண்டாட்டத்திற்காக குஷ் மற்றும் கொக்ஹைன், போதை மாத்திரைகளுடன் சொகுசு காரில் பயணித்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று திங்கட்கிழமை காலை அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை கண்காணிப்பு பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த மிரிஹான பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரும்,

களுபோவில, கடுவாவல மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30, 31 மற்றும் 32 வயதுகளையுடைய பெண்கள் உள்ளடங்குகின்றனர்.பாடசாலை நண்பிகளான இந்த பெண்கள் நால்வரும் திக்வெல்லையில் வசிக்கும் பிரிதொரு நண்பியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அதிவேக நெடுஞ்சாலை நுழைவுப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் , சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சொகுசு காரை பரிசோதித்துள்ளார்.

இதன்போதே போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குஷ் மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக

பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews