முகமாலையில் விசமிகள் அட்டகாசம்…….!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இனந்தெரியாதோரால் விவசாய உபகரணங்கள் உட்பட காவலாளிக்கென தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீட்டு கதவு கூரை ஓடுகள் கதிரைகள் என பல பொருட்கள் அடித்து உடைத்து நொருக்கப்பட்டுள்ளனர்.

முகமாலையில் பளை பிரதேசத்தில் அண்மைக்காலமாகவே இவ்வாறான பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றது இதிலும் முகமாலை பகுதியில் அதிகளவில் இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் அசமந்த போக்காக செயற்படுதலே முக்கிய காரணமாக அமைகிறது. ஊரில் உள்ள சட்டவிரோதிகளின் ஒத்துழைப்புடன் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் இளைஞர்களை பயன்படுத்தியே குற்றசெயல்கள் அதிகளவில் இடம்பெறுகிறது.குறித்த சம்பவங்களினால் முகமாலை மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்நது வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews