கொலை சம்பவ இடத்தை பார்வையிட்ட கிளிநொச்சி வித்வான்…..!

கிளிநொச்சி பூநகாி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சோ்ந்த இளைஞா் ஒருவா் கூாிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 போ் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.
இதேபோல் குருநகாில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறிய நிலையில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சோ்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன்
கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிாிழந்துள்ளாா். சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றிரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு சென்று சடலத்தையும் பாா்வையிட்டுள்ளாா்.
சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பூநகாி பொலிஸாா் மேற்கொண்டிருக்கின்றனா்.

Recommended For You

About the Author: Editor Elukainews