பருத்தித்துறை மரக்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக அதனை பழைய இடத்திற்கு மாற்றக் கூடாது என ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றஜீவன் பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரால் எடுக்கப்படும் தீர்மானத்தை நகரசபை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவரால் சுட்டிக்கட்டப்பட்டது. எனினும் நகரசபையின் தவிசாளர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்த முடியாது என்ற கருத்துப்பட விவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடியிருந்த ஊசி கட்சி நகரசபை உறுப்பினர் பிரகாஸ் அவர்களும் சந்தை பழைய இடத்திற்கு கொண்டுவரவேண்டும் என்று வாதிட்டார். மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதற்குஆதரவு தெரிவித்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் இன்று அதனை பழைய இடத்திற்கு மாற்றக்கூடாது என்றும் வாதிட்டார் இதனால் சில மணிநேரம் கூச்சல், மற்றும் தர்க்கம் வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றன. பருத்தித்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகளும் மரக்கறி சந்தையை பழைய. இடத்திற்கு கொண்டுவரவேண்டும் என்றே தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த நகரசபை உப தவிசாளர் பழைய இடத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியப்பாட்டு அய்வே தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றஜீவன் தலமையில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தை இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.


தொடர்ந்து போக்குவரத்து தொடர்பாக ஆராயப்பட்டது. இதில் 750 வழித்தட போக்குவரத்து சேவையை தவிர மற்றைய அனைத்து சேவைகளும் நேர முகாமைத்துவம் இன்மை, சீராக இடம் பெறாமை தொடர்பாகவும் சமூக மட்ட அமைப்பு பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சேவையில் ஈடுபடும் அரச பேருந்து அடிக்கடி பழுதடைவதால் மாணவர்கள் உட்பட வேலைக்கு செல்பவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேவேளை பருத்தித்துறை மருதங்கேணி புதுக்காடு ஊடாக வவுனியா செய்துவந்த பேருந்து சேவை மற்றும் இரவு 8:00 மணிம்கு பருத்தித்துறை மருதங்கேணி புதுக்காடு ஊடாக கொழும்பிற்கு மேற்கொள்ளப்பட்டுவந்த பேருந்து சேவைவும் இடைநிறுத்தப்பட்டுள்ளயாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு பதிலுரைத்த பருத்தித்துறை சாலைக்கு பொறுப்பான அதிகாரி 20 வரையான சாரதிகளுக்கு வெற்றிடமிடுப்பதாகவும் இதனாலேயே சேவை சரியாக இடம் பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று பல சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்ட தவறவில்லை.
இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், போலீசார், இராணுவ அதகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.