புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர்..!

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம்
நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர்  நேற்று (15) புத்தூர் வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகியது
யாழ்.மாவட்டத்தின் 48 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் பங்குகொள்ளும் இப்போட்டிகளின்
 முதல்நாள் ஆட்டத்தில்
“பி” பிரிவில் கொலின்ஸ் வி.க எதிர் எவறெஸ்ற் வி.கழகமும் மோதின.விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இரண்டு் அணிகளும் தலா ஒரு கோல்களை போட்டு சமநிலையில் இருந்தது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேலும்  4 கோல்களை போட்டு 5:2 என்கின்ற கோல் கணக்கில் எவரெஸ்ட் வி.கழகம் வெற்றிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற
 “ஏ” பிரிவிற்கான போட்டியில் சென்.றோக்ஸ் வி.க எதிர் நவிண்டில் கலைமதி வி.கழகம் மோதியது. விறுவிறுப்பான ஆட்டமுடிவில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம் 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews