நீதவான் சரவணராஜா விவகாரம்: அரச ஊடகங்கள் குறிப்பிடும் CID அறிக்கை முழுமையானதா? 

உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும்  அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அவரது வெளிநாட்டுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் இலங்கை அரசின் அச்சு ஊடகங்களான தினகரன் மற்றும்... Read more »

ஒரே குடையில் திரண்டு முழு அடைப்பை வெற்றியடையச் செய்ய ஒத்துழைக்கவேண்டும்….! சரவணபவன்

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு அரசியலுக்காக போராட்டங்களை முன்னெடுக்கக் கூடாது. மக்கள் மயப்படுத்திய போராட்டங்களையே முன்னெடுக்கவேண்டும். எதிர்காலத்தில் பொது அமைப்புக்கள் உள்பட அனைத்துத் தரப்புக்களுடன் கலந்தாலோசித்து முழு அடைப்புப் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிக்கவேண்டும். எப்படியிருப்பினும் இம்முறை முழு அடைப்பின்... Read more »

முஸ்லிம் மக்களும் ஆதரவு…..!

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாளைய (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிட்ட... Read more »

வடக்கு கிழக்கு ரீதியிலான கடையடைப்புக்கு ஆதரவு கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம்!

எதிர்வரும் 20ம்  திகதி வடக்கு கிழக்கில் முழுமையாக இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள்... Read more »

சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும்…..!  ஐ.நாவில் கஜேந்திரகுமார் 

சரியான   சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு !

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வு.சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக்... Read more »

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அவர்... Read more »