நீண்டகாலமாக ஒரே பதவி கிழக்கு மாகாண அதிகாரிகள் 6பேருக்கு ஒரே நாளில்  இடமாற்றம்.. ஆளுநர் அதிரடி.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றிய சில திணைக்களத் தலைவர்கள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததாலும், அந்த பதவிகள் தொடர்பான தகுதிகளை பூர்த்தி செய்யாததாலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் தனிப்பட்ட வாகனங்களுக்கு இனிமேல் எரிபொருள் கிடையாது.! மாவட்டச் செயலர்

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்புவதெனவும், தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதில்லை எனவும் அவ்வாறு வழங்குவதாக இருந்தால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்படவேணடும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை மாவட்ட... Read more »
Ad Widget

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் இரு தரப்பினரிடையே பரஸ்பரம் மோதல்! பலர் காயம், வீடுகள் சேதம்.. |

யாழ்பாணம் – அராலி வீதியில் உள்ள வசந்தபுரம் – நித்தியவொளி கிராமங்களை சேர்ந்த சிலரிடையே உருவான முரண்பாடு மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுவதுடன், வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் 1ம் திகதி மாலை... Read more »

அரச ஊழியர்களின் வெள்ளிக்கிழமை விடுமுறை இரத்து…..!

அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்திருக்கின்றது. வெள்ளிக் கிழமைகளில் விடுமுறை வழங்கி  வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டிருக்கின்றது. Read more »

வெளிநாட்டிலிருந்து சட்டரீதியாக இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி..!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சட்டபூர்வமாக பணம் அனுப்பும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்ந்தும் சட்டபூர்வமாக பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலான இரண்டு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு முன்மொழிவில் சட்டப்பூர்வ... Read more »

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டணை அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்களே தவிர இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள்! வடமாகாண ஆளுநர்.

வடமாகாணசபையின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீதான ஒழுக்காற்று விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டணை அல்லது பதவி நீக்கமே செய்யப்படும். இடமாற்றம் வழங்கப்படாது. என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

எரிபொருள் நிரப்பு நிலைய சண்டியத்களுக்கு ஆப்பு……!

வாகனங்களை வரிசையில் நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை சூழ பெருமளவானோர் தேவையில்லாமல் நின்று கொண்டிருப்பதை தடுக்கும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுக்கவேண்டும். என யாழ்.மாவட்டச் செயலர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாவட்ட செயலரின் தலைமையில் பிரதேச செயலர்கள்,... Read more »

அரசாங்க வாகனங்களுக்கும் QR முறையில் எரிபொருள்! எரிசக்தி அமைச்சர்.

அரசாங்க வாகனங்கள், அமைப்புக்களின் வாகனங்கள், வணிக வாகனங்கள் ஆகியன QR அட்டையை பெறுவதற்கு ஆகஸ்ட் 12ம் திகதிக்கு பின் ஒரே வணிக பதிவு இலக்கத்தின் கீழ் பதிவுகளை செய்து பெற்றுக் கொள்ளலாம். குறித்த தகவலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ சமூக... Read more »

நல்லுார் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..!

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  மேலும் ஆலயத்திற்கு செல்லும்போது வீட்டில் ஒருவரேனும் தங்கியிருப்பது சிறந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இது குறித்து பொலிஸார்... Read more »

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம், இரு குற்றவாளிகளுக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை! நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு.. |

பெண் ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழங்கில் குற்றவாளிகள் இருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் வழக்கின் குற்றவாளிகளுக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் தலா 05 இலட்சம்... Read more »