1,900 லீற்றர் டீசல், 19 லீற்றர் பெற்றோலை பதுக்கியவர் கைது!

விசேட அதிரடிப்படையின் அரந்தலாவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனுமதிப் பத்திரமின்றி எரிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிராந்துருகோட்டையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது 1,900 லீற்றர் டீசல் மற்றும் 19 லீற்றர் பெற்றோலை விசேட அதிரடிப்படையினர்... Read more »

ஐஓசியிடம் இருந்து டீசல் 7,500 மெட்ரிக் தொன் கொள்வனவு!

லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து 7,500 மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான பணப்பரிமாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read more »

4 மாதங்களுக்கு தேவையான எரிவாயு: உலக வங்கியுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தரவாதமளித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more »

IMF இடம் இருந்து சாதகமான அறிவிப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் அறிக்கை ஒன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. இதேவேளை, அதிகாரிகள் தமது... Read more »

துப்பாக்கியுடன் நால்வர் கைது!

திருகோணமலை, பேரமடு காட்டுப் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அனுமதியின்றி உள்நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வரை நேற்றிரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் அக்போகம பகுதியைச் சேர்ந்த ஈருவரையும், கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கந்தளாய்... Read more »

மூன்று நாட்களுக்குப் பின்னர் தனியார் பேருந்துகளுக்கு இன்று எரிபொருள் விநியோகம்…..!

கடந்த 27 ம்  திகதியிலிருந்து 28 ம் திகதி மதியம் வரை தமக்கு எரிபொருள் வழங்ககோரி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்  தனியார் பேருந்துகளுக்கும்  டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே  மீண்டும் டீசல் விநியோகம் இன்றைய தினம்... Read more »

யாழ் பல்கலை ஒழுக்காற்று அதிகாரியால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒன்றியத்துக்கு கடிதம்.

முஸ்லிம் மாணவிகளின் கலாச்சாரம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்று பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி  யால் தாம் மன உளைச்சலுக்கு  ஆளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் பல்கலைக்கழக புதுமுக இரு முஸ்லிம்... Read more »

உயிர்காப்பு நீச்சர் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கிவைப்பு.

உயிர்காப்பு நீச்சர் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி நீர்விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர் காப்பு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற பயிற்சிகளின் பின்னர் அவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில்... Read more »

அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு.

அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்வம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. நீராட சென்ற நபரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார். 19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வௌியானது –

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு கடந்ததினம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. Read more »