கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை நேற்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. அப்பணிப்பின் கீழ் விசேட... Read more »

டெங்கு நுளம்பு பெருகும் அபாயகரமான இடமாக சங்கானை செங்கற்படை பிள்ளையார் ஆலய சூழல்!

வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியல் சுமார் 3100 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில வாரங்களில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் செங்கற்படை மஹாதேவா பிள்ளையார் ஆலயத்தின் அருகிலுள்ள காணியில்... Read more »

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தூக்கில் தொங்குவதை... Read more »

செவிப்புலனற்றோர் நிறுவனம் நடாத்திய வருடாந்த நத்தார் விழா…!

வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவனம் நடாத்தும் வருடாந்த நத்தார் விழா நேற்று காலை 9:30 மணியளவில் மாலிசந்தி பகுதியில் உள்ள வடமராட்சி செவிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் அதன் செயலாளர் தலமையில் இடம் பெற்றது. இதில் பிரதம விருந்தினராக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவின் தலைவர்... Read more »

7 ஆயிரம் பேர் மழையால் பாதிப்பு

பலத்த மழை மற்றும் வௌ்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 வீடுகள் அனர்த்தத்தில்... Read more »

பேருந்து நிலையத்தில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு மற்றுமொருவர் படுகாயம்

ஹைலெவல் வீதியில் ஹோமாகம பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியைக் கடந்த பாதசாரிகள் இருவர் மீது லொறி மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார்... Read more »

இலங்கையில் குழந்தைகளிடையே ஹெபடைடிஸ் நோய் அதிகரிப்பு

தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். முறையான மருத்துவ சிகிச்சைகளை... Read more »

ஐ.எம்.எவ் உதவிச் செயற்திட்டம் தொடர்பில் நந்தலால் வீரசிங்க கருத்து

கடன் மறுசீரமைப்பின் ஊடாக, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 10 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் சலுகை கிடைக்கும் என, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதிய உதவிச் செயற்திட்டம் தொடர்பில், இவ்வாறு கருத்து வெளியிட்டார். நாம் சர்வதேச... Read more »

முட்டை இறக்குமதி தொடர்பான முக்கிய செய்தி!

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை, முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரச வணிகக் கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். சந்தையில், முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்ததன் காரணமாக, உணவுக் கொள்கைக்கான குழு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, தொடர்ச்சியாக... Read more »

மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக 438 பேர், இடைத்தங்கல் முகாம்களில்!

மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த, 131 குடும்பங்களை சேர்ந்த 438 பேர், இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் உள்ள பாலியாறு... Read more »