கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதன்போது வாள்வெட்டுக்கு இலக்காகியவரது விரல்... Read more »
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று பல்கலைக்கழக நுழைவாயிலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். சம்பள உயர்வு, ஆட்சேர்ப்பு, மேலதிக நேரக் கொடுப்பனவு, வரவு செலவுத் திட்டத்தில் தமது சம்பள முரண்பாட்டிற்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்... Read more »
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மற்றும் தடயங்கள் தொடர்பான கலந்தாய்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வ.ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்றது. முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷும்,காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி திரு.தற்பரனும் ஆஜராகியிருந்தனர். இதன்போது, வெறுமனே... Read more »
சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (03.03.2025) மு.ப 09.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் ஆன்மீகம் மற்றும்... Read more »
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழ விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூதாட்டி... Read more »
இன்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் 128 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும்.கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு... Read more »
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொன்னாலை வீதியில் இன்று காலை மணல் ஏற்றிச்... Read more »
மட்டுவில் மோகனதாஸ் சனசமூக, நிலைய 77வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று காலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் மரம்நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்காக முன்னின்று உழைத்தவர்களையும் கழகத்தின் வளர்ச்சியில் பங்காற்றி அமரத்துவம் அடைந்தவர்களையும் நினைவுகூரும் முகமாக விளையாட்டு மைதானத்தில் மரம்நாட்டு ... Read more »
தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த சர்வதேச மேடையே ஜெனீவா ஜெனிவா என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அதன் முழு விபரமும் வருமாறு ஐ.நா... Read more »