திடீரென மயங்கி வீழ்ந்து ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய சிங்கரத்தினம் சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்... Read more »

ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த ரணில்!

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று புதன்கிழமை  காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்  திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம்... Read more »

மரம் முறிந்து வீழ்ந்து இளம் தாய் மரணம்..!

குளியாப்பிட்டிய – மாதம்பே பிரதான வீதியில் சுதுவெல்ல பகுதியில் இன்று பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பே, கல்முருவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கல்முருவயிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில்... Read more »

தம்புள்ளை தண்டர்ஸ் அணியுடன் தொடர்புடைய பங்களதேஷ் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

LPL போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ்  அணியுடன் இணைந்து செயற்படும் பங்களதேஷ் பிரஜையான தம்மி ரஹுமான் என்ற நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (22) கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து,... Read more »

வற்றாப்பளை கண்ணகை அம்மனை தரிசித்து விட்டு வந்த யாழ்ப்பாண பக்தர்களுக்கு ஏற்பட்ட சோகம்!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து தடம்புரண்ட நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி வற்றாப்பளை... Read more »

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/91 கிராம சேவகர் பிரிவில்... Read more »

சாவகச்சேரியில் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை இன்றையதினம் மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையில் நிதர்சன், பொலிஸ் கான்ஸ்டபிள்களான நிருபன், சிப்னாஸ் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,... Read more »

தமிழ் பொது வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பம்..!

தமிழ் பொது வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில்.பிரத்தியேக இடம் ஒன்றில்நகுறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில். பாராளுமன்ற உறுப்பினர்களான  சித்தார்த்தன். செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கட்சி சார்பில்.... Read more »

கிளிநொச்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு துணை போய்விட்டார்கள் – சுகாஷ் சீற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொன்னாவெளியிலே சுண்ணக்கல் அகழ்வு என்று கூறி தமிழர்களது காணியை அபகரிக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து... Read more »