வவுனியாவில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய... Read more »

இலங்கை கலால் திணைக்கள அதிகாரிகள் நாளாந்தம் பணம்மோசடி.

இலங்கை கலால் திணைக்கள அதிகாரிகள் நாளாந்தம் சுமார் 400 மில்லியன் ரூபா வரையான பணத்தை மோசடி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கம் கலால் திணைக்கள பரிசோதகர்களுக்கு எதிராக மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின்... Read more »

தம்மிக்க பெரேராவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி –

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சிவில் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த... Read more »

11 ஆவது இந்துக்களின் பெரும் சமர் போட்டி சமநிலையில் முடிவு.

இந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்குமிடையிலான 11ஆவது துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவுற்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில்  நேற்று இடம்பெற்ற இப்போட்டிகள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றன. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முதலில்... Read more »

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து குடும்ப பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படாமையை கண்டித்து நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடும்ப பெண் ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் பொலிஸார் சந்தேகநபர்களுக்கு... Read more »

மட்டக்களப்பில் பதுக்கப்படும் அரிசி! வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

மட்டக்களப்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பதுக்கல் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் அரிசியினை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.... Read more »

நூற்றுக்கணக்கான பிக்குகளின் பங்கேற்புடன் குருந்தூர்மலையில் புத்தர்சிலை பிரதிஸ்டை! போராட்டத்துக்கு தயாராகும் தமிழ் மக்கள்.

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு, குமுளமுனை குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டு வரும் குருந்தாவசோக விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் இன்று (12)காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின்... Read more »

மீன்பிடித்துறைமுகங்களுக்கு தனியாக எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி.

மீன்பிடித்துறைமுகங்களுக்குத் தேவையானஎரிபொருளை தனியாக இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போதைக்கு 22 மீன்பிடித்துறைமுகங்கள்... Read more »

அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக... Read more »

புதிய கட்சியை உருவாக்க திட்டமிட்டுள்ள பொன்சேனா –

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதிய கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதில் முன்னாள் இராணுவ அதிகாரிகளும் ஈடுபட உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய... Read more »