குருநாகல், வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார். இக்கொலை நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண் குருநாகல், மரலுவாவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என... Read more »
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் திங்கட்கிழமைக்குள்(நேற்றையதினம்(02))... Read more »
சென்னை – யாழ்ப்பாணம் இடையே 200வது தடவையாக விமானம் தரையிறக்கம்! 200வது அலையன்ஸ் ஏர் டிசம்பர் 2022 இல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து சென்னையில் இருந்து விமானம் நேற்று அக்டோபர் 02 ஆம் தேதி 200வது தடவையாக யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதுவரை... Read more »
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் அவர்கள் சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை டுபாயில்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. முல்லைதீவு நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக,... Read more »
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்தவாரம் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனியா – கூமாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் கட்டிட பணிக்காக ரூபா 100,000 நிதியும், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கின்ற 3 குடும்பத்தினருக்கு... Read more »
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் நிர்வாக தெரிவு நேற்று பிற்பகல் 4:30 மணியளவில், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் தலைவராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்... Read more »
இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வு.சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக்... Read more »
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்கள் முழுமையாக வாழும் இடத்தில் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் அமைக்கப்படும் விகாரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன விரோத செயற்பாட்டின் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம்... Read more »