ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது. Read more »
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அண்மையில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தமிழர்களின் சாபக்கேடு என இனவாதத்தை வாரி இறைத்துள்ளார். இதன் மூலம் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நீதித்துறைக்கு பொருத்தமான அமைச்சரா என்ற கேள்வி எழுந்துள்ளது... Read more »
யாழ். வடமராட்சி பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைபடகுகளினால் பெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்கரையை அண்மித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமாக உள்நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பருத்தித்துறை, இன்பருட்டி, சுப்பர்மடம், சக்கோட்டை கடற்றொழிலாளர்களின்... Read more »
மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னார்... Read more »
வடமராட்சி உடுத்துறை 10 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் இனம்தெரியாத பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை குறித்த பொருள் கரையொதுங்கியுள்ளதோடு அதனை பார்வையிடுவதற்காக மக்கள் வருகை தருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக வடமராட்சி கடற்பகுதிகளில் குறிப்பாக உடுத்துறை,நாகர்கோவில்,குடாரப்பு ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான... Read more »
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அ. அரவிந்குமார் தெரிவிக்கின்றார். இவ்விடயம்... Read more »
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. சாதகமான ஆரம்பத்துடன் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சவாலான மறுசீரமைப்புகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். பணி முடித்து வீடு திரும்பிச் சென்று... Read more »
யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேசசெயலகத்தின் சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாளாந்த கடமைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகள் 28 பேருக்கான பொங்கல் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் திருமதி முத்துப்பிள்ளை தம்பிப்பிள்ளையின் ஞாபகார்த்தமான கனகம்மா அறக்கட்டளையினரின் நிதி உதவிலேயே குறித்த பொங்கல்... Read more »
வீதிகளில் கால்நடைகளை கட்டி, மக்களது போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டம் அறவிடப்படும் என வலி. மேற்கு பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா பாலரூபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வீதிகளில், அதிலும்... Read more »