சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை 19/07/2024  ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.... Read more »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு நடந்தது என்ன..?

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பல நிர்வாக சீர்கேடு இருப்பதாக வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வைத்தியர் ராஜீவ் அவர்கள் பதில் வைத்திய அத்தியட்சகராக... Read more »

பதவி விலகினார் மருத்துவர் இராமநாதன் அர்சுணா..!

மருத்துவ நிர்வாக துறையில் இருந்து பதவி விலகுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் தனது சமூகவலைத்தள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் கூறுகையில், “இன்றிலிருந்து இந்த கறை படிந்த... Read more »

சற்றுமுன் குழப்பம் விளைவித்தாக ஒருவர் கைது…!

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் தம்பி மூ தம்பிராசா கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு... Read more »

சாவகச்சேரி பதில் வைத்திய அத்தியட்சகர் யார்? சர்ச்சைக்கு யாழில் முற்றுப்புள்ளி..!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது கடமையில் உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது... Read more »

வேலை இல்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்..#

வடமாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு என்னும் கருப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தினரால்  முன்னெடுக்கப்பட்டது. இதில் அரச நியமனத்தில் உள்வாரி, வெளிவாரி, பாகுபடுவேண்டாம் எல்லோருக்கும்... Read more »

சுயநலவாதிகள் தமது அரசியல் நலனை முன்னிறுத்தியே மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் – அமைச்சர் டக்ளஸ்..!

சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதி மண்டபத்தில் ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில்... Read more »

நூற்றிற்க்கு மேற்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் இடம் பெறற தமிழ் மக்கள் பொதுச்சபை கூட்டம்..!

தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் நூற்றிற்க்கு மேற்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் இன்று காலை 10:00 மணிமுதல் 4:30 மணிவரை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் தமிழ் மக்ள் பொதுச்சபையின் நிருவாக குழு உறுப்பினர் சுந்தரேசன் தலமையில் இடம்... Read more »

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV  கமராக்கள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV  கமராக்கள் pபொருத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அநுர கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட CCTV  கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க CCTV  கமராக்கள் பல அங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு... Read more »

ரணில் – ராஜபக்சர்களுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜபக்சர்களுக்கும் இடையில் கடந்த 10ஆம் திகதி காலை அவசர இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சாகல ரத்நாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பங்கேற்றுள்ளதுடன், பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில்... Read more »