என்னிடம் உதவி கேட்க வருபவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை அந்த வகையில் மதுபான நிலையம் ஒன்றை பெறுவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசு தேவைப்பட்டதால் அதனை நான் வழங்கியது உண்மை தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.... Read more »
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று நேற்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான எவ்வித நடவடிக்கைகளிலும்... Read more »
இத்தீர்மானம் இன்று செப்டம்பர் 29 ஆம் தேதி, திருகோணமலை உப்பு வெளி,ஆயர் இல்ல மண்டபத்தில், நடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும்தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரை களம்... Read more »
இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவானது, மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களினதும் துணிகரமான தீர்மானம் ஆகும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே... Read more »
மு.க.ஸ்டாலின் முதலில் சட்டத்தை படித்துப் பார்த்துவிட்டு பேச வேண்டும் – என்.வி.சுப்பிரமணியம் சீற்றம்!
தொடர்ச்சியாக எமது நாட்டு கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றச்சாட்டுவதை விட்டுவிட்டு, 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்படிக்கையையும், சட்டத்தையும் தமிழக முதலமைச்சர் படித்துப் பார்த்துவிட்டு பேச வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.... Read more »
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 4 வீதிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு யாழ்ப்பாண தேர்தல்... Read more »
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவானது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளையின்... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு, 01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர் 02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர் 03-பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர் 04-திஸ்ஸ... Read more »
அனைத்து மக்களும் நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவேன் என இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே,... Read more »
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி சற்று முன்னர் வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம்... Read more »