இன்று முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவித்த வகையில், நாளை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்... Read more »

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

அனுராதபுரம் மிஹிந்தலை காட்டு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் மிஹிந்தலை காட்டுப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்,... Read more »

ஒன்றரை கோடி ரூபா ஹெரோயினுடன் தம்பதியினர் கைது!

கல்கிஸ்ஸ – அத்திட்டிய பகுதியில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 855 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 37 வயதான ஆண்... Read more »

தென்மராட்சியில் மேலும் இருவருக்கு கொரோனா!

தென்மராட்சியில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் மேலும் இருவர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 82வயதான முதியவர் ஒருவரும், நேற்று கச்சாய் வீதி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த... Read more »

பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச்சூட்டில் பலி!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கத்தியால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சந்தேக நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு... Read more »

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்த விவாதம் புதன்கிழமை

காலி முகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் புதன்கிழமை (27) இடம்பெறவுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.... Read more »

எரிசக்தியின் அதிகாரத்தை வெளிச்சக்திகளுக்கு வழங்குவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் எரிசக்தியை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டு ரீதியான அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கி, நாட்டின் மின்விளக்கு சுவிட்சை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பதன் மூலம் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் நிலையே ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையிலான... Read more »

அமைதியான போராட்டத்தை வன்முறைகள் மூலம் அடக்குவது ஆபத்தான பாதைகளைத் திறப்பதற்கே வழிவகுக்கும் – முன்னாள் எம்பி சந்திரகுமார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் விளைவாகவே நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. புதிய ஜனாதிபதி தெரிவாகி பதவியேற்க முடிந்தது. எனவே  அந்த அமைதியான போராட்டத்தை வன்முறைகள் மூலம் அடக்குவது ஆபத்தான பாதைகளைத் திறப்பதற்கே வழிவகுக்கும்  என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான ... Read more »

எரிபொருள் நிலையத்தில் இளைஞனை தாக்கிய கோப்பாய் பொலிசார்..

யாழ் கல்வியங்காடு எரிபொருள் நிலையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கும் கோபாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இடையிலே ஏற்பட்ட வாய் தர்க்கத்தால் இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளார்.   குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது நல்லூர் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட... Read more »

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கான யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை  மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான   ஒரு தொகுதி யூரியா உரம் இன்றைய தினம் (24-07-2022) வந்து சேர்ந்துள்ளதுடன் இவற்றை உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கம நல  அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம்   ஆரம்பத்தில் கிளிநொச்சி... Read more »