எ.ரி.சி 85 கரங்கள் அமைப்பினால் பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு..!(video)

யாழ் இணுவிலில் அருள் செல்வம் கல்வி(ATC) நிலையத்தின் 1985 கா.பொ.த சாதாரண தரப் பரிட்சைக்கு தோன்றிய A.T.C85 கரங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களினால்  நேற்று ஞாயிற்றுக்கிழமை வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொதி A.T.C கல்வி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. ATS... Read more »

இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்கு, இந்தியாவால் பேருந்துகள் கையளிப்பு

இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்’ எனும் கருப்பொருளின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பேருந்துகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார். இலங்கையின் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய உதவின்கீழ்... Read more »

இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கு தொடருந்துப் பாதையை நவீன மயப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

இந்திய அரசின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான தொடருந்துப் பாதையை நவீன மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டடம் இன்று (08.01.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு மதவாச்சி தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றது. கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதையில் மதவாச்சி தொடக்கம் ஓமந்தை... Read more »

தமிழ் மக்கள் தீர்வுக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணில் திரளவேண்டும் …..! 4 நாளாக ஆர்ப்பாட்டம்

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு  மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகி;வின வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8 ஜனவரி) 4 வது நாளாக... Read more »

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13 வது நினைவு தினம் உணர்வபூர்வமாக அனுஸ்டிப்பு!!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது நினைவு தின நிகழ்வு இன்று (08) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மறைந்த ஊடகவியலாளர்களின் நினைவாக  நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,... Read more »

போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கவனயீர்ப்பு பேரணி

போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கவனயீர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களால் குறித்த கவனயீர்ப்பு முன்னெடுத்தப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் சூசைப்பிள்ளை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பாரதிபுரம் மத்திய வீதி ஊடக பாடசாலை முன்றலை அடைந்ததும் நிறைவடைந்தது. குறித்த பேரணியில்... Read more »

ஆய்வுகூடத் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களின் பகிஷ்கரிப்பால் வடக்கில் சுகாதாரதுறை முடக்கம்!

ஆய்வுகூடத் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களின் பகிஷ்கரிப்பால் வடக்கில் சுகாதாரதுறை முடங்கியது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் நலன்புரி சங்கம் அவசர உதவி வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆய்வுகூடத் தொழிநுட்பவியலாளர்களின் (எம்.எல்.ரி) பணிப் பகிஷ்கரிப்பால் வடக்கில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.... Read more »

வடக்கு ரயில் சேவைகள் மட்டுப்படுத்தல்!

இன்று (08) முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் வீதியை நவீனப்படுத்துவதற்கு சுமார் 05... Read more »

காலி துறைமுகத்தை வந்தடைந்தது பிரெஞ்சு பயணிகள் கப்பல்

105 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரெஞ்சு பயணிகள் கப்பலான லீ செம்லைன் நேற்று (07.01.2023)மாலை காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து காலியை வந்தடைந்ததுடன் திருகோணமலைக்கு புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நாளை (09.01.2023) இலங்கையிலிருந்து புறப்படும்.... Read more »

கொவிட் தொற்று நிலைமை மீண்டும் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவது கடினம்: பொது சுகாதார பரிசோதர்கள் சங்கம்!

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இலங்கையில்... Read more »