இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு கோரிக்கை…!

நாளையதினம் 4/10/2024 ம் திகதி இலங்கை வரவிருக்கின்ற இந்தியவின் வெளியுறவு துறை அமைச்சர்  ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு  1,  1974 ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்ததஸதுன்  6-வது சரத்தில் பிரகாரம்  பாரம்பரியமாக   கடலில்  மீன்பிடிக்கும் உரிமையை... Read more »

மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும்….!

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இன்று காலை  பருத்தித்துறையில் இடம் பெற்றது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பிரிந்திகா செந்தூரன் தலமையில் காலை 9:00. மணியளவில்  இடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பருத்தித்துறை சுகாதார... Read more »

யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் கைது!

காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின்  1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I iPhone 14   PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழுள்ள பொலிஸ் குழுவினர்... Read more »

கருத்து சுதந்திரத்திற்கான வெளியினை உறுதிப்படுத்தல் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆரோக்கியமான விவாதங்களிற்கும், கருத்துப் பரிமாறல்களிற்குமான களமாக பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன. கருத்துச் சுதந்திரம் கல்விச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக சமூகத்தினை சேர்ந்தவர்கள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்... Read more »

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிபுதிய செயலாளர் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில்... Read more »

யாழில் காணி விற்ற 1 கோடி 8 இலட்சம் ரூபா பணம் வீதியில் வைத்து கொள்ளை!

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 7 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றது.... Read more »

தமிழர்களுக்கு   எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன் – சபா குகதாஸ் கேள்வி

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது  அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவிக்காமல் கடந்த கால ஆட்சியாளர் போன்று அரசியல் பேசுவது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே... Read more »

கிளிநொச்சியில் இடம் பெற்ற மற்றொரு போராட்டம்…!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மற்றுமொரு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் நேற்று 01/10/2024 காலை 9.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நடாத்தப்பட்டது. சிறுவர்களாக கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டியும்,... Read more »

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ..!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று 01/10/2024 செவ்வாய்க்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க  அலுவலகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில்  சிறுவர்களாக கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டியும்,... Read more »

கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கான  பேருந்து சேவை ஆரம்பம்…!

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் ,நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம் பெற்ற பேருந்து சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில்  நேற்றைய தினம் பிற்பகல் 7:15 மணியளவில்  கீரிமலையில்... Read more »