வடமாகாண பனைஅபிவிருத்தி வாரம் மாகாணசபையின் ஏற்பாடு கைவிடவோ மாற்றியமைக்கவோ திணைக்களத்துக்கு அதிகாரமில்லை – பொ.ஐங்கரநேசன் கண்டனம்

வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சு கூட்டுறவுத் திணைக்களத்தையும் பனை , தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கங்களையும் , பனை அபிவிருத்திச் சபையையும் இணைத்து ஆண்டுதோறும் யூலை 22 தொடங்கி 28 வரையான ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனைஅபிவிருத்தி வாரமாக 2015 ஆம் ஆண்டிலிருந்து மிகச்சிறப்பாகக்... Read more »

குருந்தூர் மலையில் பொங்கலுக்கு மூட்டிய தீயை சப்பாத்து காலால் அணைத்த பொலிஸ் அதிகாரி – அனைவரும் ஒன்றுபட்டு மீட்க வேண்டும் என்கிறார் சித்தார்த்தன் எம்.பி

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையிலும் கூட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் பொலிசார், பிக்கு ஒருவர் ஆகியோர் பொங்கல் செய்யும் இடத்திற்கு வந்து நிகழ்வினை குழப்புகின்றார்கள். ஒருவர் இதற்கென்று விளம்பரங்கள் கொடுத்து சிங்கள மக்களை... Read more »

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் – அனந்தி வலியுறுத்து

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது, சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மற்றும் அவர்களின் மேற்பார்வையிலும்  மேற்கொள்ளப்பட  வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் அவரது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு... Read more »

சங்கத்தானை புளியடி சந்தியில் புகையிரத கடவை அமைக்க அமைச்சர் பந்துல இணக்கம்

சங்கத்தானை புளியடி சந்தியில் புகையிரத கடவை அமைக்குமாறு சாவகச்சேரி சங்கத்தானை மக்கள் நீண்டகாலமாக பல தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் பலன்கிடைக்காத நிலையில், இவ்விடயம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.  இந்நிலையில்,... Read more »

நாளை முதல் உரத்தின் விலை குறைப்பு!

50 கிலோகிராம் எடையுடைய எம் ஓ பி உர மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது. இதற்கமைய நாளை முதல் அமுலாகும் வகையில் எம் ஓ பி உரம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 15 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் உர மூடை நாளை... Read more »

மசகு எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்ட் ரக மசகு எண்ணெய் 81.41  அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதன்படி றுவுஐ ரக மசகு எண்ணெய் 76.96 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து மசகு எண்ணெய்யின்... Read more »

துப்பாக்கி, கஞ்சாவுடன் இருவர் கைது

அம்பாலங்கொடை கொடஹேன பகுதியில் இரு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, பாதுக்க பகுதியில்... Read more »

அரசுகள் உரிமைகளை வழங்குவதை விட மறுப்பதிலேயே அதிக கவனம்….! கனகராஜ் .

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் சர்வதேச உரிமைகளை தமது நாட்டுக்குள் நடைமுறைப்படுத்துவதை விடுத்து அதனை மறப்பதிலே அதிக கவனம் செலுத்துகின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ். தனியார் விருந்தினர்... Read more »

மலையகத்தையும் இணைத்த ஈழம்…! அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம்

மலையகம் -வடக்கு கிழக்கிற்கு உறவிற்கு வடக்குக் கிழக்கு நிலை நின்று கோட்பாட்டு ரீதியாக பாரிய பங்களித்தவர்கள் தமிழரசுக் கட்சியினர் தான.; 1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான போதே தோற்றம் பெற்ற இப் பாரம்பரியம் தமிழர் கூட்டனி காலத்தில் இன்னோர் பரிமாணத்தை அடைந்தது எனலாம்.... Read more »

வடமராட்சி கிழக்கில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க அவசரப்படும் பிரதேச செயலர்.!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி  பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் வடமராட்சி கிழக்கில் மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின்  ஊடாக senok... Read more »