தென்னிலங்கைவாசிகள் நாட்டிய விஷச்செடி தமிழ் தேசிய கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது – சுரேந்திரன் ஆதங்கம்!

எமது ஒற்றுமையை குலைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நாட்டப்பட்ட விஷச் செடிகள் தற்போது விருட்சமாகி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மூளாயில் நடைபெற்ற தேர்தால் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே... Read more »

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கும் எதிர்வரும் 8/11/2024 வரை விளக்கமறியல்….!

எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ்நாடு நாகை மாவட்த்தை சேர்ந்த 12 மீனவர்களையும்  எதிர் 8/11/2024 மத திகதிவரை தடுப்பு காவலில் வைக்குமாறு கௌரவ பதில் நீதவான் குமாரசுவாமி  அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து... Read more »

சென்மேரிஸ் உள்ளூர் மென்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம் Rising Star அணி வசம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் வடமராட்சி கிழக்கு கழக வீரர்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட  மென்பந்தாட்ட தொடர் KSPL-05 இறுதி போட்டி நேற்று  (26.10.2024) சனிக்கிழமை இடம்பெற்றது. சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் தலைமையில் விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபம் நோக்கி... Read more »

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் ஆரம்பம்…!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளரும்,  ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகள்  இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் போராளிகள் மற்றும் வடமராட்சி கிழக்கு... Read more »

எல்லை  தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது…!

எல்லை தாண்டி  இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள். இலங்கை கடற்படையால் இன்றிரவு  கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. இந்தியா தமிழ்நாட்டிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை  இலங்கை... Read more »

தமிழ் அரசியல் சிதறல் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை பலவீனப்படுத்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கைத் தீவு முழுமையாக சிதறடித்துள்ளது. ஜனநாயகத்தின் பேரில், மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கும் நிலைமைகளும், வாக்குகள் பலவீனப்படுத்தும் மற்றும் மலினப்படுத்தும் சூழ்நிலைகளே வெளிப்படுத்தப்படுகின்றது. 225 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு, 22 தேர்தல் மாவட்டங்களிலும், கட்சிகள் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 அணிகள் போட்டியிடுகளின்றன.... Read more »

ஞானச்சுடர் 322  ஆவது ஆன்மீக மலர் வெளியீடு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் மாதாந்த வெளியீடான் ஞானச்சுடர் 322 வது ஆன்மீக மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில், காலை 10.45 தொடக்கம் 12.00  மணி  வரை இடம்பெற்றது. ஐப்பசி... Read more »

சிறுமி துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய முதியவர் கைது….!

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று மாலை  (24.10.2024) வியாழக்கிழமை  சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவான நிலையில் நீண்ட தேடுதலின் பின் நேற்று (24) இரவு... Read more »

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு…!

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி – ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு இன்றைய தினம் (25.10.2024) பி. ப 03.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்... Read more »

நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கும் நோய் பரப்பும்  நுளம்புகளை இனங்காணும்   நடவடிக்கை

டெங்கு நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கும் நோய் பரப்பும்  நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில் மாவட்ட தொற்று நோய் பிரிவு வைத்தியர் க.ரஞ்சன் தலைமையில்  பொதுச்சுகாதார பரிசோதகர்கள், தொற்றுநோய் பிரிவின்... Read more »