யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி

யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பமானது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் குறித்த கண்காட்சி இன்று(29)... Read more »

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு  எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம்... Read more »

சாவகச்சேரி செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம்!

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  இரதோற்சவம் இன்று (29) வெகு சிறப்பாக இடம்பெற்றது.  காலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் ஆரம்பமாகி, காலை 9 மணிக்கு விநாயகர் சித்திரத் தேரில் ஆரோகணித்து நூற்றுக்கணக்கான... Read more »

ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. ஊடகத்துறையில் தனது ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வினை... Read more »

திருமண நிகழ்வில் திடீரென உயிரிழந்த இளம் யுவதி!

ஹொரணை – பதுவிட்ட பிரதேசம், மெகொட உட கெவத்த பிரதேசத்தில் திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு... Read more »

மாத்தறையில் பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மாத்தறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால்சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இன்று காலை அவர் தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் மாத்தறை – கெகுணுதுர பகுதியைச் சேர்ந்த... Read more »

வந்தேறு குடிகள் சிங்களவர் என்பதை நிரூபிக்க மகாவம்சமே போதும்: சபா குகதாஸ்

ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என சொல்லும் சிங்கள இனவாதிகளுக்கு பதில் கொடுக்க மகாவம்சமே போதும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (27.08.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஈழத்... Read more »

14 தங்க பாளங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 27 மில்லியன் ரூபா பெறுமதியான 14 தங்க பாளங்களுடன், ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து, நாட்டுக்கு வந்த குறித்த பயணியிடம் ஒரு கிலோ 314 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து... Read more »

இரத்தினபுரி மாவட்டம் தொட்டிகலம மலைப்பகுதியில் தீ பரவல்

இரத்தினபுரி மாவட்டம் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குட்டபிட்டிய பகுதியில் உள்ள தொட்டிகலம மலைப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளது. பெல்மடுல்ல பொலிஸாருக்கு நேற்றிரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினால்... Read more »

இலங்கை – இந்தியா இடையில் பாலம் கட்டுவது குறித்து கர்தினால் ஆண்டகை கருத்து

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து... Read more »