அமேசான் மழைக்காடுகளில் இருந்த உலகின் மிகப்பெரிய பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. இந்த பெரிய பாம்பானது, கடந்த 24 ஆம் திகதி இறந்து கிடந்ததாகவும் இது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாம்பை அமேசான் மழைக்காடுகளில் அண்மையில் கண்டுபிடித்தனர். அனா ஜூலியா என்று அழைக்கப்பட்ட... Read more »
தியதலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் அறை ஒன்றில் பெண் ஒருவருடன் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் குறித்த பௌத்த பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பௌத்த பிக்கு பொரளந்த பகுதியில் அமைந்துள்ள விஹாரையொன்றைச் சேர்ந்தவர் எனவும்... Read more »
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு பெரியகல்லாறு மயான வீதியில் குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில், வேகத்தினை... Read more »
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா... Read more »
கடந்த 20.10.2023 அன்று வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன் (வயது... Read more »
அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது நேற்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பகியது. மாணவர்களின் அணிநடை நிகழ்வு,... Read more »
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் காலம் கடந்த இறப்பு, காலம் கடந்த பிறப்பு, திருமணப்பதிவு அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளல், பொலிஸ் நற்சான்று பத்திரம்... Read more »
திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரஙகளை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (27) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள்... Read more »
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை... Read more »
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டத்தின் நிறைவில் கட்சியின் இரண்டு தரப்பிற்கு இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டு, அது வாய்த்தர்க்கமாக மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சமூக... Read more »