நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில  22.09.1995. அன்று  இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் புக்கார விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட  22 மாணவச் செல்வங்களின் 29 வது நினைவேந்தல் இன்றாகும். அன்றைய நாட்களில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில்... Read more »

சமூக வலைத்தளம் தொடர்பில் வெளியான தகவல்…!

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின்... Read more »

அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியும் இல்லை, மருத்துவரும் இல்லை, நோயாளர்கள் அவதி …..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்திய சாலையானது பிரதேச வைத்தியசாலை  தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு மருத்துவர்கள் பகலில் கடமையில்... Read more »

வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை வழங்கல்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தவகையில் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை, வாக்குச் சாவடிகள் அமைப்பதற்காக அந்தக் கிராமத்துக்கு... Read more »

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றசாட்டில் மூவர் தமிழ்நாட்டில் கைது…!

யாழ்ப்பாணம்  கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக  இந்தியாவின்  இராமநாதபுரம் மாவட்டத்தில்  துண்டிகிராம கடலில்  நேற்று மாலை 2.00 மணியளவில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கொழும்புத்துறையை சேர்ந்த ஒருவரும்  வடமராட்சிகிழக்கு பிரதேசம் உடுத்துறையை சேர்ந்த... Read more »

95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் கைது..!

95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 15.09.2024 விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும்,  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது கத்திக்குத்து…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும்,  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றி முன்தினம் புதன்கிழமை 11/09/2024 இரவு  கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட அயலவர்    பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவசர... Read more »

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வாக்களர் அட்டை  விநியோகிப்பதற்காக சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவே குறித்த நபர் கைது... Read more »

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென உத்தரவு?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிகளில்  சட்டவிரோத சுருக்குவலை தொழில்   மீண்டும் தலை தூக்கியுள்ளதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத சுருக்குவலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொழில் நடவடிக்கைகளும் கட்டுக்குள்... Read more »

வீடு புகுந்து வன்முறை குழு அட்டகாசம் – பாலூட்டிக் கொண்டு இருந்த தாய் மீதும் தாக்குதல்!

இன்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள்... Read more »