புலம்பெயர் தமிழர்களை சக்தி வாய்ந்த ஆதாரமாக இணைக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம்.

புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை இலங்கை அரசாங்கம் பெற முடிந்தால், அது நலிந்து போன இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஆக்கபூர்வமான பங்களிப்புக்கு வழிவகுக்கும். புலம்பெயர் தமிழர்களை முதலீடு மற்றும் உதவிக்கான சக்தி வாய்ந்த ஆதாரமாக இணைத்துக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியமானது இலங்கை குறித்த அதன்... Read more »

எரிபொருள் விநியோகஸ்தர்களின் நிபந்தனை:விநியோகம் ஸ்தம்பிக்கும் நிலை.

இலங்கைக்கு இதுவரை எரிபொருளை விநியோகித்து வந்த ஏழு விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய 655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்தும் விதம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கும் வரை எரிபொருள் விநியோகம் நடைபெறாது என அந்த விநியோகஸ்தர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். 655 மில்லியன் டொலர் நிலுவை... Read more »

யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு வர எரிபொருளுக்கு 92 ஆயிரம் ரூபா செலவு.

நாடாளுமன்றக்கூட்டங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து, பணிகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல எரிபொருளுக்கு மாத்திரம் 92 ஆயிரம் ரூபாய் செலவாவதாக அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அம்பாறையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் ஒரு பயணத்திற்காக மாத்திரம் எரிபொருளுக்கு 66... Read more »

இரண்டு வாரங்களுக்கு இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம்.

அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை... Read more »

இலங்கை குழுவினரை ஏமாற்றிய ரஷ்யா.

இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று இந்த வார இறுதியில் ரஷ்யா செல்லவிருந்த போதிலும் குறித்த பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை குழுவொன்று ரஷ்யா செல்ல தயாரானது. ரஷ்யா செல்லவிருந்த குழுவில் கல்வி அமைச்சர்... Read more »

கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம்: பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த நால்வர் கைது!

பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 2 இராணுவ வீரர்களும், விமானப் படையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட... Read more »

மே 09 வன்முறைச் சம்பம்: 3056 பேர் கைது!

மே மாதம் 9 ஆம் திகதி நாடாளாவிய ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற 857 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 56... Read more »

IMF இன் எதிர்கால நடைமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர்... Read more »

நாட்டில் அத்தியவசிய மருந்துகள், தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு!

10 வகையான அத்தியவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு ஒரு வாரத்துக்கு மாத்திரமே போதுமானவையாக உள்ளன. சகல வைத்தியசாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் விலங்குகள் கடித்தால் போடப்படும் விலங்கு விசர்நோய் தடுப்பு மருந்தும் போதியளவில் இல்லை என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள... Read more »

கறுவா, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. அதன் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3 ஆயிரத்து 900... Read more »