முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட குழந்தை இயேசு கோவில் – வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா பரமேஸ்வரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குழந்தையேசு கோவில் பத்திமாதா... Read more »
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் மனைவி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நல்லூர்... Read more »
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர். Read more »
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே... Read more »
நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில் மக்களின் தற்சார்பு பொருளாரத்தை ஊக்கிவிக்கும் முகமாக பயன் தரும் தாவரங்கள் வழங்கும் திட்டம் நேறறு கொடிகாமம் பகுதியில் இடம் பெறறது. இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசபை உறுப்பினரும், கொடிகாமம் வடக்கு கிரமா அபிவிருத்தி சங்க செயலாளரும், இலங்கை முதல்... Read more »
யாழ்மாவட்டம் வடமராட்சி கிழக்கின் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி மிக மிக மோசம் காணப்படுவதாகவும், 2016 ஆண்டு திருத்தப்பட்டும் இருந்ததை விட மிக மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லையெனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச... Read more »
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில்... Read more »
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தரத்திற்கு, புறம்பாக... Read more »
வருமான வரி அறவீடு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருட வருமானத்தை ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள், வாடகை வருமானம் ஈட்டுவோர், முதலீடுகளின் மூலமான வட்டி ஊடாக வருமானம் ஈட்டுவோர்... Read more »
நாட்டில் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடி... Read more »