பருத்தித்துறை துறைமுக கடலில் சடலம்….!

பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. இன்று அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்படுகிறது. சடலம் இதுவரை அடையாளம் காண்ப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்திறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

உலருணவுப் பொதிகளை நேரில் சென்று வழங்கிய தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமானது, அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.07... Read more »

தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா…!

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள, தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையருகே ஆடிப்பிறப்பு தின விழா இன்று காலை நடைபெற்றது.  தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.எஸ்.சிவஞானராஜா அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு... Read more »

வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன – யாழ். அரசாங்க அதிபர் கவலை

இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன என யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன்  தெரிவித்துள்ளார். நேற்று (16)  நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில்  உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது... Read more »

விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் முன்னெடுப்பு

அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 2வது நினைவுதினத்தை முன்னிட்டு, “விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நேற்றையதினம் (16) காலை 8.30 தொடக்கம் மாலை 3.30 வரை முன்னெடுக்கப்பட்டது. ... Read more »

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

நேற்று (16.07.2023) ஞாயிற்றுக்கிழமை பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து பொன்னாலையில் உள்ள 12 விசேட தேவையுடையவர்களுக்கு உதவித் திட்டங்களை வழங்கின. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்புத் தேவையுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5,000 மதிப்புள்ள உலர் உணவுப்... Read more »

மூதூர் பெரியவெளி , மணற்சேனை கிராமத்தில் படுகொலையின் செய்யப்பட்ட 44 பேரின் 37வது நினைவு நாள்…..!

மூதூர் பெரியவெளி , மணற்சேனை கிராமத்தில் கடந்த 1986.ம் ஆண்டு ஆடி மாதம் பதினாறாம் திகதி இம்பெற்ற 44. பெயரது  மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாள் நேற்று மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும் உயிரிழந்த பொதுமக்களுக்கான ஈகைச்... Read more »

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு!..!

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில் புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு... Read more »

பொதுவாக்கெடுப்பு மூலம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு காண உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எம். கே.சிவாஜிலிங்கம் கடிதம்…!

பொதுவாக்கெடுப்பு மூலம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வை காண உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் கட்சியின் பொது செயலாளருமான எம். கே.சிவாஜிலிங்கம் கடிதம் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். அவர்... Read more »

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் இறையடி சேர்ந்தார். 

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் (வயது 98)  நேற்று சனிக்கிழமை  இறையடி சேர்ந்தார். அன்னாரது இறுதி யாத்திரை இன்று 16.7.2023 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் நகுலேஸ்வரத்திலிருந்து ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »