ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது ஓய்வூதியர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டார். “ஓய்வூதிய உதவித்தொகை வழங்குவதில் நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம்,... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை சம்பந்தன், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று... Read more »
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்... Read more »
அனுராதபுரத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் படுக்கையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 சகோதர சகோதரிகள் உள்ள... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் சிலர் இன்றிரவு(10) நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். நாளை(11) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் இதுவரையான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின்... Read more »
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக நிலைகொண்டுள்ளதால், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் அசாதாரண காலநிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்று சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்... Read more »
மணியன்குளம் பகுதியில் வசிக்கும் ஐம்பது தெரிவிசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி உதவும்படி, மணியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பூமணி அம்மா அறக்கட்டளையினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப் பணியாக ஐம்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்... Read more »
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(9) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஹேரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே தலைமையில் மடு பொலிஸ்... Read more »
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TURC) ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்களிப்பதற்கான வாய்ப்பினை கொண்டிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வலியுறுத்தியுள்ளது. “பெருங்குற்றங்களை இழைத்தவர்களை நேரில் கண்ட சாட்சிகள் அடையாளம் காட்டமுடியும் –... Read more »
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெறவுள்ளது. இன்று புதன் கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த நினைவேந்தல்... Read more »