ஜனாதிபதி இன்று பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று காலை இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார். அரசாங்கத் தகவல்... Read more »

பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து அரசு கவனம்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், இன்று சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்... Read more »

ஜனாதிபதிக்கு தி.நடேசன் கடிதம்!

பென்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரியுள்ள பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், அதுதொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தின் பிரதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பிவைத்துள்ள அவர், எந்த மோசடியிலும் தாம் ஈடுபடவில்லை என்றும்... Read more »

நாட்டில் ஆபாசப் பேச்சுக்கு தடை!

நாட்டில் தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்வது தொடர்பான சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்... Read more »

யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் யாழ், கிளிநொச்சி 3 குடிநீர்த் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்தவாறு இன்று மெய்நிகர் வழியில் ஆரம்பித்து வைத்தார். சுபீட்சத்தின் நோக்குக் கொள்கை திட்டத்தின் கீழ் 2025... Read more »

நாட்டின் சுகாதாரத்துறை மோசமாகி வருகிறது – ராஜித சேனாரத்தன எம்.பி

இன்று நாட்டின் சுகாதாரத் துறை மோசமாகி வருகிறது. நாடு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. நாடு பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே... Read more »

ஊழல்வாதிகளின் பெயரே முதலிடத்தில் உள்ளது – அக்மீமன தயாரத்ன தேரர்

உலகில் யாருக்கும் செய்ய முடியாத விடயங்களை செய்து முதலிடத்துக்குச் சென்றவர்களின் வீர செயல்கள் தொடர்பிலான விவரங்களே ஆரம்ப காலங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. தற்போதைய நிலையில் வீர சரித்திரங்களுக்குப் பதிலாக உலகில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என்று,... Read more »

வெள்ளைப்பூண்டு மோசடி; வர்த்தகர் கைது October 6, 2021

லங்கா சத்தொசவில் இடம் பெற்ற  வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக, பூண்டு தொகையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 55 வயதான வர்த்தகர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்ற... Read more »

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (6) நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில் ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்ட பின்னணி மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை தயாரிப்பதற்கும்... Read more »

வெள்ளைப்பூண்டு மோசடியை ஏற்கின்றது அரசு! – பந்துல தெரிவிப்பு.

சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான சம்பவம் இடம்பெற்றுள்ளதை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் இது தொடர்பில் சி.ஐ.டியினர் உரிய விசாரணைக ளை முன்னெடுத்து வருகின்றது எனவும், அதனுடன் கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில்... Read more »