21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதிக்கு தடை விதித்த ஒரே நாடு இலங்கை – ராஜித சேனாரத்ன.

21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை குறிப்பிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல. அத்தியாவசிய பொருளாகும். மக்களுக்கு இவ்வாறானா அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடையாகியுள்ள நிலையில் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

எமது நாட்டின் வாகன இறக்குமதி மீது விதிக்கப்படும் வரி வீதம் மிகவும் அதிகம். வாகனத்தின் விலையை விடவும் நூற்றுக்கு 200 தொடக்கம் 300 வீதம் வரி விதிக்கப்படுகின்றது.

இதனால் தான் நாட்டில் வாகனங்களுக்கான விலை அதிகமாக காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான விலை மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

அந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது குறித்த வரி விதிப்பின் காரணமாக எமது நாட்டில் நான்கு மடங்கு விலை அதிகமாக காணப்படுகின்றது.

தற்போது அந்த விலை அதிகரிப்பை விட வாகன இறக்குமதி தடையின் காரணமாக பல மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin