35000 பெறுமதியான வாழ்வாதார பொருட்கள் வழங்கிவைப்பு….!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் கிளிநொச்சி பூநகரி பிரதேச பிரிவிற்குட்பட்ட  10 குடும்பங்களுக்கு ரூபா 35000/- பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று காலை 10.00  மணியளவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ்வரன் தலமையில் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன், பெண்கள் திட்ட இணைப்பாளர் லவீனாஹஷந்தி, பூநகரி க.கூ.சங்களின் சமாச தலைவர் ஜேசப் பிரான்சிஸ், பயனாளிகள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதிகள் என பலரும்  கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews