யாழில் காணொளியில் பேசிக்கொண்டு காதலியை மிரட்ட முயற்சித்த இளைஞன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

காணொளி நேரலையில் பேசியபடி தனது காதலியை மிரட்டுவதற்கு முயற்சித்த இளைஞன் கழுத்தில் கயிறு இறுகியதில் உயிரிழந்த சம்பவம் யாழ்.நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞனே உயிரிழந்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் அச்சகம் ஒன்றில் குறித்த மாணவன் தங்கியிருந்துள்ளார். தான் தங்கியிருக்கு அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு 

தனது பெண் நண்பிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார். எனினும் கதிரை சரிந்ததால் நிலை தடுமாறிய இளைஞனின் கழுத்தில் கயிறு இறுகியதால் அவரது உயிர் பிரிந்தது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews