பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலை…!  சங்கத் தலைவர் நிலாம்.

யாழ் மாவட்டத்தில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதால் அவர்கள் தொழில் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்மாவட்ட இரும்பு வியாபார சங்கத் தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான  நிலாம் தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போதைய நிலையில் பழைய இரும்பு கிலோ 30 ருபாவாக குறைவடைந்துள்ளதால்  யாழ் மாவட்டத்தில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் தொழிலாளர் தொழில் இழப்பை சந்தித்துள்ளனர்.குறித்த இழப்பானது அவர்களை மட்டுமன்றிஅவர்களது குடும்பத்தினரையும் சுற்றத்தாரையும் வாழ்வாதார ரீதியில் பாதிப்படைய செய்துள்ளது   எனவே இவர்களது தற்போதைய நிலையை   கருத்தில் கொண்டு பழைய இரும்பு வியாபாரிகள் தமது தொழிலுக்காக வரும்போது  பழைய இரும்புகளை நியாயமான விலைகளுக்கு வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிவழங்குமாறு அதன் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்
மேலும் தற்போதைய சூழலால் அனைத்துவிதமான பொருட்களும் விலையேற்றத்தை சந்தித்துவரும் வேளையில் பழைய இரும்புகளின் விலையோ விலைசரிவை சந்தித்துள்ளது இந்த விலைசரிவால் பழைய இருப்பு வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் அவர்களை சார்ந்திருப்பவர்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் காணப்படுகிறார்கள் இவர்களை கைதுக்கிவிடும் பொறுப்பு இங்கு வசிக்கும் மக்களையே சாரும் எனவே பழைய இரும்பு வியாபாரத்திற்காக வரும் வியாபாரிகளை கருணையுடன் கண்ணோக்கி அவர்கள் வியாபாரத்தில் முன்னேற்றமடைய உதவிபுரியுமாறு அவர்மேலும் கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews