வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளராக சபாரத்தினம் செல்வேந்திரா  தெரிவு

வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளராக சபாரத்தினம் செல்வேந்திரா  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த கருணாந்தராசாவின் அமரத்துவத்திறக்கு  பின்னர் அண்மையில் புதிய தவிசாளராக ச.செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவரால் கொண்டுவரப்பட்ட 2022 ம் ஆண்டுக்கான     பாதீடு இரண்டு டடவைகள் தோற்கடிக்கப்பட்டு அவர் பதவியிழந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் தவாசாளர் தெரிவு இடம் பெற்றது.
இதில் மீண்டும் தவிசாளராக மீண்டும் சபசரத்தினம் செல்வேந்திரா
தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தவிசாளரை  தெரிவு செய்வதற்க்காக உள்ளூராட்சி மன்றங்களின்  ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் சபையில் சமூகமளித்திருந்தார். காலை 10 :00
மணிக்கு இடம் பெற்ற இந்நிகழ்வில் ஏகமனதாகவே தவிசாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: bavany