பச்சை மிளகாய் ஒரு கிலோவின் விலை 1000 ரூபாய் தொடக்கம் 1200 ரூபாயாம்..!

கண்டி, கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாய் தொடக்கம் 1200 ரூபாயாக அதிகரித்திருக்கின்றது. 

சில நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.400 ஆக இருந்ததாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 680-700 ஆக இருந்ததாக மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பச்சை மிளகாயின் விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews