வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin