இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்!

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.
90 களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க நாடாளுமன்றக் குழுவுடன் இலங்கை வந்த அவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்திருந்தார்.
சர்வதேச ரீதியாக தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற பல பேச்சுவார்த்தைகளிலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.
அவரது மறைவு தொடர்பாக உலக தமிழர் பேரவை தமது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews