யாழில்12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாய் கைது!

நேற்றிரவு, கொடிகாமம் பகுதியில், 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாயார் கொடிகாம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த தாயாரின் கணவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காலமாகியுள்ளார். இந்நிலையில் நேற்றிவு தனது மகனை வீட்டில் இருக்கவேண்டாம் என அடித்து விரட்டியுள்ளார்.

இந்நிலையில் அச் சிறுவன் நேற்று இரவு முழுவதும் வீதியிலேயே நின்றுள்ளார். அதன் பின்னர் இன்று காலை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தாயாரை கொடிகாமம் பொலிஸார்  கைது செய்ததுடன் மகனை பொலிஸ் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதியும் தாயார் இவ்வாறு தாக்கியதால் அச்சிறுவன் ஐந்து நாட்டகளாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை  சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews