மீனவருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்! ஒரே நாளில் இத்தனை மில்லியன் வருமானம்.

வாதுவ பிரதேசத்தில் இன்று இரண்டு வலைகளில் சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான பெருமளவான மீன்கள் சிக்கியுள்ளன.

இன்று போயா தினம் என்ற போதிலும் மீன்களை கொள்வனவு செய்வதற்கு அதிகளவிலான மக்கள் குவிந்திருந்தனர்.

மொத்தமாக மீன்கள் கொள்வனவு செய்வதற்கு லொறி மற்றும் முச்சக்கர வண்டி வியாபாரிகளும் வருகைத்தந்துள்ளனர்.

அதிக விலையிலான மூன்று இனங்களைச் சேர்ந்த மீன்கள் வலையில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியிலான மீன்கள் கிடைத்துள்ளமையினால் தாம் நீண்ட நாட்களின் பின்னர் மகிழ்ச்சியாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews