“ஒவ்வொரு தேவையிலும் கேரளாவிற்குத் துணையாக நிற்கிறீர்கள்” – கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் வாழ்த்து!

திரையுலக நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது 67- வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களது ஒவ்வொரு தேவையிலும் நீங்கள் எப்போதும் கேரளாவிற்குத் துணையாக நிற்கிறீர்கள். எங்கள் சினிமா மற்றும் கலாச்சாரத்திற்கு நீங்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்களது வாழ்க்கையிலும், பணியிலும் அதிக மகிழ்ச்சியையும், வெற்றியையும் பெற வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews