வைத்திய கலாநிதி சக்திபாலனின் நினைவு தினம். அனுஷ்டிப்பு!

தொல்புரம் மேற்கில் பிறந்து அவ்வூரிலேயே கல்வி கற்று மன்னாரில் கடமைபுரிந்து வந்த நிலையில், இயற்கை எய்திய வைத்திய கலாநிதி சக்திவடிவேல் சக்திபாலன் அவர்களது 31வது நாள் நினைவேந்தலானது, வலி. மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இன்று (07) இடம்பெற்றது.

மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டு இருந்த நிலையில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த 06.10.2021 அன்று அன்னார் இறையடி சேர்ந்தார். இந்த நிலையில் அவரது 31வது நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது ஈகைச்சுடரேற்றி அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அன்னாரின் குடும்பத்தினர், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews