கிளிநொச்சியில் போலி இலக்கத் தகடுகளை தயாரிக்கும் இடம் சுற்றி வளைப்பு.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட இலக்க தகடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாகனங்களின் முன் பக்கம் காட்சிப்படுத்தப்படும் 15 போலி இலக்க தகடுகளும், வாகனங்களின் பின் பக்கம் காட்சிபடுத்தப்படும் 28 வாகன இலக்க தகடுகளும், 363 அரச இலச்சினை பொறிக்கப்பட்ட ஸ்டிகர்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயத நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர் இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews