க்ளாஸ்கோவில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசிய மோடி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி  நட்பு ரீதியில் சந்தித்து பேசியுள்ளார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஸ்கொட்லாந்தின் – க்ளாஸ்கோ நகரில் இடம்பெறுகின்றது. இதில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ள அரச தலைவர்களை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நட்பு ரீதியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews