பிள்ளைகளைகொன்ற பின் ஆற்றில் பாய்ந்த இலங்கைப் பெண்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சபாடி மற்றும் சந்தனி ஆகிய பெயர்கள் கொண்ட 11, 3 வயதுகளுடைய இரண்டு பெண் குழந்தைகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்கள் வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்டுள்ளன. இருவரும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சடலங்கள் கிடந்த அறையில் கொலைக் குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் எதுவும் காணப்படவில்லை. குழந்தைகள்இருவரும் தலையணை மூலம் மூச்சிழக்கும் வரை அழுத்திக் கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

பிள்ளைகளுக்கு சுகயீனம் காரணமாக மாத்திரைகள் கொடுத்து உறங்க வைத்துள்ளேன்.அதனால் அவர்கள் பாடசாலை செல்லவில்லை என கடைசியாக நேற்றுக் காலையில் தன்னைச் சந்தித்த சமூக உதவியாளர் ஒருவரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.

அதன் பின் அவர் தலைமறைவாகி விட்டார். அதன் பிறகே படுக்கையில் போர்வையினால் மூடப்பட்ட நிலையில் குழந்தைகளது உடல்கள்கண்டுபிடிக்கப்பட்டன.

குழந்தைகளது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் காவற்துறையினர் தாயாரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மோப்ப நாய்கள், ட்ரோன்கள் போன்றவற்றின் உதவியுடன் பல மணி நேரங்கள் நீடித்த தேடுதலுக்குப் பிறகு அவரது சில உடைமைகளைக் கண்டுபிடித்த காவற்துறையினர் பின்னர் அப்பகுதியில்உள்ள Adige என்ற ஆற்றில் இருந்து தாயாரது சடலத்தை மீட்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews