கனகராயன்குளம் விபத்தில் நால்வர் காயம்!

னகராயன்குளம் பகுதியில் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரமும் ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர் என்று கனராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இன்று இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவகற்றும் உழவு இயந்திரம் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஏ – 9 வீதியில் புளிங்குளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது அதே வீதி வழியாக வந்த ஹயஸ் ரக வாகனம் கனராயன்குளம் பகுதியில் வைத்து கழிவகற்றும் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தையடுத்து ஹயஸ் ரக வாகனம் வீதியை விட்டு விலகி தடம் புரண்டதுடன், கழிவகற்றும் உழவு இயந்திரமும் கடும் சேதத்துக்கு உள்ளாகியது. குறித்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

னகராயன்குளம் பகுதியில் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரமும் ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர் என்று கனராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவகற்றும் உழவு இயந்திரம் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஏ – 9 வீதியில் புளிங்குளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது அதே வீதி வழியாக வந்த ஹயஸ் ரக வாகனம் கனராயன்குளம் பகுதியில் வைத்து கழிவகற்றும் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தையடுத்து ஹயஸ் ரக வாகனம் வீதியை விட்டு விலகி தடம் புரண்டதுடன், கழிவகற்றும் உழவு இயந்திரமும் கடும் சேதத்துக்கு உள்ளாகியது. குறித்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews