கோட்டாபய உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடு/

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC)) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

.

Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் இந்த முக்கியஸ்தர்களை புலனாய்வு செய்து, உரிய நேரத்தில் கைதுசெய்து, குற்றவிசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் இலங்கை இராணுவத்தின்  முன்னாள் இராணுவ அதிகாரியுமான கமல் குணரட்ண, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரிய, இலங்கை பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்காரவாத விசாரணைப் பிரிவுகளின் (TID) பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் உட்பட 2002ம் ஆண்டு முதல் இலங்கை பொலிஸின் (SLP) பொலிஸ்மா அதிபர்களாகப் பதவி வகித்து வந்தவர்கள் மற்றும் 2002ம் ஆண்டு முதல் இலங்கை பொலிஸின் விசேட அதிரடிப்படைப்பிரிவின் (STF) கட்டளை அதிகாரிகளாக செயற்பட்டவர்கள் போன்றோர்களின் பெயர்களும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.

இலங்கையிலும், பிரித்தானியாவிலும் வாழும் ஏராளமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் ஆகிய செயற்பாடுகள் ஊடாக வலுக்கட்டாயமாக நாடுகடத்தல், தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் பொறுப்பாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews