பாவற் கொழுந்துகள் விசமிகளால் வெட்டி சேதம்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பாவற் கொழுந்துகள் விசமிகளால் வெட்டி சேதமாக்கப்படுத்தப்பட்டுள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயத்தையே தனது வாழவாதாரமாக விவசாயத்தையே செய்து வந்துள்ள நிலையில் குறித்த விவசாயியின் காணியில் பயிரிடப்பட்டுள்ள பாவற்காய் கொழுந்துகள் (25)நேற்று முன் தினம் இனந்தெரியாத சில விசமிகளால் அரிவாளால் வெட்டி வீசப்பட்டுள்ளது.சுமார் நூறுக்கும் மேற்பட்ட பாவற் கொழுந்து சேதமாக்கப்பட்டுள்ளன

.

குறித்த விவசாயி கூறுகையில் இவ்வாறான செயற்பாடுகள் மனவேதனை அளிப்பதாகவும் நாட்டில் ஏற்பட்டுள் விலை அதிகரிப்புகள் மற்றும் பசளை தட்டுப்பாடுகள் பசளை விலை ஏற்றங்களுக்கு மத்தியில் தாம் விவாசாயத்தை மேற்கொண்டு வருகின்றமையே பாரியளவில் கஸ்டமாக உள்ள வேளையில் இவ்வாறான ஈனச்செய்கைகள் மனதளவில் தாம் அதிகளவில் பாதிப்படைந்துள்ளதாகவும்.தமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சமீப காலமாக இவ்வாறான விவசாயத்தை அழிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews