பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடாத்தப்பட் தாக்குதலை கண்டித்து நாடளவிய ரீதியில் இந்து ஆலையங்களுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் –இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோசன்–

பங்களாதேசில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நாட்டிலுள்ள இந்து ஆலையங்களல்; ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனையும் கண்டித்து ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக இந்து அமைப்புக்கள் இந்து ஆலையங்கள், இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோசன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள திருச்சொந்தூர் முருகன் ஆலைய மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகிலே எங்காவது ஒரு மூலையில் இந்துக்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அது நமக்கு ஏற்பட்ட துன்பமாக கருதவேண்டும் அப்போது மட்டும் தான் நீ உண்மையான இந்துவாகும் என சுவாமி விவேகானந்தர் கூறினார்.

பங்களாதேசில் 2013 ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 680 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் நவராத்திரி தினத்திலே இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமிய மதவெறியாளர்களால் கொலை வெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 

இந்த தாக்குதலில் சுவாமி நிதிதாஸ் பிரபு உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன். 550 வீடுகள், 442 கடைகள், தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 861 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் பல பெண்கள் மாபங்கப்படுத்தப்பட்டதுடன் 1608 இந்து மற்றும் பௌத்த விகாரைகள். இராமகிருஷ;ண மிஷன், உட்பட வனக்கஸ்தலங்கள் உட்பட 51 அம்மன் சக்தி பீடங்களில் இரண்டான தாட்சாயினுடைய 50 வது சக்தி பீடமான அவரது வலதுகை வீழ்ந்த இடம் , நாக்கு வீழ்ந்த இடமான இரு சக்தி பீடகள் தாக்கப்பட்டுள்ளது

 

இவ்வாறு இந்த நவராத்திரி தினத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலை இலைங்கை வாழ் இந்துக்கள் இந்து அமைப்புக்கள் இந்து ஆலையங்கள், இந்து நிறுவனங்கள் கூட்டமைப்பாக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை இவ்வாறனா இந்துக்களுக்கு எதிராக இம்பெற்ற இந்த தாக்குதலை கண்டித்தும் அந்த தாக்குதலில் உயிர் நீத்த உமது உறவுகளுக்கு ஆத்மசாந்திவேண்டியுட கனவயீர்பு ஆர்ப்பாட்டத்தில் எதிர்வரும் 29 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நாடளவிய ரீதியில் ஆலையங்களுக்கு முன்னால் ஈடுபட இந்து ஆலையங்கள் இந்து அமைப்புக்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

எனவே அன்றைய தினம் இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்க அன்றை தினம் நாட்டிலுள்ள இந்து ஆலையங்களுக்கு முன்னால் அகழ்விழக்கு ஏற்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அவர்;;;;;;;; தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews