வன்முறைகள் அற்ற பாதுகாப்பான வடமாகாணம் உருவாக்கப்படும்..! திணைக்கள தலைவர்களுடனான சந்திப்பில் வடமாகாண ஆளுநர்.. | 

வடக்கில் வன்முறையற்ற சூழலை உருவாக்குவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தொிவித்திருக்கின்றார்.

நேற்றய தினம் திணைக்கள தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், குழு மோதல்கள் , தனிப்பட்ட தாக்குதல்கள் , உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறாதவாறு, 

அவற்றை சமூகத்தில் இருந்து முற்றாக அகற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்குவன். பாதுகாப்பான சூழல், பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள்,

கொரோனா தொற்று தொடர் நடவடிக்கை, பாடசாலைகளை மீள ஆரம்பித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு வழங்குகின்ற

பொறிமுறை பற்றியும் ஆளுநர் கலந்துரையாடினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews