சுனாமி 21 வது ஆண்டு  நினைவு, உடுத்துறை நினைவாலயம் 

சுனாமி 21 வது ஆண்டு  நினைவு, உடுத்துறை நினைவாலயம் 21 வது சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
இதில் மலர் மாலையினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், ஆகியோர் அணிவித்து வைக்க தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து தேசிய கொடியினை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகைசுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராமசேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது
தொடர்ந்து அஞ்சலி உரைகளை வடமராட்சி கிழக்கு தலைமை கிராம சேவகர் செபமாலை தோமஸ்யூட், பருத்தித்துறை  பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் ஆகியோர் நிகழ்த்தினார்.
இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews